search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புபடை வீரர்"

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புபடை வீரர்களுக்கும விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர். #Afghan #Taliban
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.

    இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban
    பாதுகாப்புபடை வீரர் வீட்டில் தங்கிய 15 வயது சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.

    ×